கேகாலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை (Photos)
இலங்கையில் மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை கேகாலை பகுதியில் நேற்று (21.09.2022) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், சர்வமதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு கோரிக்கை
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலி முகத்திடல் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
