மட்டக்களப்பில் பழுதடைந்த மரக்கறிகளை விற்பனை செய்த நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் அச்சுறுத்தல் டெங்கு தாக்கம் ஆகியவற்றுடன் போராடிவரும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய நிலையினை காண முடிகின்றது.
கோவிட் அச்சுறுத்தல் டெங்கு தாக்கம் ஆகியவற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியதுடன் சுத்தமான உணவுகளையும் வர்த்தக நிலையங்களில் கொள்வனவு செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தவேண்டிய தேவை பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு உள்ளது.
மட்டக்களப்பு நகரில் பாவனைக்குதவாத மரக்கறிகளை விற்பனை செய்த மரக்கறி விற்பனை நிலையம் ஒன்று இன்று பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பன்சல வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட மாகாண மேற்பார்வை பரிசோதகர் கே.ஜெயரஞ்சன் தலைமையில் கோட்டை முனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.
குறித்த மரக்கறி விற்பனை நிலையத்தில் உள்ள களஞ்சியசாலை மிக மோசமான நிலையிலிருந்ததுடன் அதனுள் அழுகிய நிலையில் பெருமளவான மரக்கறிகள் மீட்கப்பட்டது.
அத்துடன் வர்த்தக நிலையங்களில் முன்பாகவும் பாவனைக்குதவாத நிலையில் மரக்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து 220 கிலோவுக்கு அதிகமான பாவனைக்குதவாத மரக்கறிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.







சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan