லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியிருப்பார்கள் - சிறீதரன் சபையில் ஆவேசம்
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்து அதில் தமிழ் கைதிகள் மரணித்திருப்பார்களாயின், லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியிருப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நின்றிருந்தவர்களை, இராணுவ சிப்பாய் ஒருவர் 1985ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். அதில் 10 பேர் மரணித்தனர்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பின்னர் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தனர்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயும், அவரது சகாக்களும் துப்பாக்கியை காண்பித்து தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியிருந்தனர்.
தங்களுடைய சப்பாத்துக்களை நக்கி சுத்தம் செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
துப்பாக்கி அல்லது வெடி பொருட்களை சாதாரண ஒருவர் வைத்திருந்து கைது செய்யப்பட்டிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், லொஹான் ரத்வத்தேயின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால், அதில் தமிழ் கைதிகள் மரணித்திருப்பார்களாயின், லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியிருப்பார்கள்.
லொஹானின் இராஜினாமா வெறும் கண்துடைப்பு. ஆகையால் அவரிடமிருக்கும் சகல பதவிகளையும் அபகரித்து, அவரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
லொஹான் ரத்வத்தேவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்! - மார்ச் 12 இயக்கம்
லொஹானுக்கு எதிராக சுயாதீன விசாரணை தேவை - தேசிய சமாதான பேரவை வேண்டுகோள்
லொஹான் ரத்வத்தவை பதவி விலக்குமாறு ஜனாதிபதியிடம் நாமே கூறினோம்! மன்னிப்புக்கோரும் அரசு
லொஹானின் துப்பாக்கி வெடித்திருந்தால் புலிக்கதை கூறப்பட்டிருக்கும்
தமிழ் அரசியல் கைதிகளிடம் முறைதவறி நடந்த லொஹான்! குற்றப்புலனாய்வத் துறையினரிடம் வாக்குமூலம்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam