லொஹான் ரத்வத்தேவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்! - மார்ச் 12 இயக்கம்
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பான முன்னாள் இராஜாங்க லொஹான் ரத்வத்தே தொடர்பான சம்பவத்தை விசாரிக்க நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மார்ச் 12 இயக்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.
இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, லொஹானின் கட்சி பிரதிநிதித்துவத்தை இடைநிறுத்தி, விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மார்ச் 12 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறைச்சாலை ஆணையாளரால் நடத்தப்படும் விசாரணையில் மக்களுக்கு நம்பிக்கை இருக்காது என்று இயக்கத்தின் இணைப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் நம்பமுடியாத அமைதியான அணுகுமுறை நாட்டில் அவமானகரமான மற்றும் மோசமான அரசியல் கலாசாரத்திற்கு வழிவகுத்தது என்றும் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனவே, ரத்வத்தயின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தவும், நடத்தையை கண்காணிப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்வதாகம் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை அவமானப்படுத்தப்படும் வகையில் நடந்து கொள்ளும் இவ்வாறானவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுப்பது சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் அதிகபட்ச பொறுப்பாகும் என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி நினைவூட்டியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri