மடு மாதாவிற்கு மணி முடி சூடிய நூற்றாண்டு விழா திருப்பயணம் ஆரம்பம்
மடு மாதாவிற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் மன்னார் மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லும் திருப்பயணம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த திருப்பயணமானது இன்று (07.01.2024) ஞாயிற்றுக்கிழமை காலை மடு திருத்தலத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
திருப்பயணம்
1924 ஆம் ஆண்டு கொழும்பு ஆயரும் அவருடன் இணைந்து இந்தியாவிலிருந்து வந்த ஆயரும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு 25 ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட பாதுகாவலியாம் மடு அன்னையின் திருச்சுரூபம் மன்னார் மறைமாவட்ட பங்கு தளங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழமையான தொன்றாகும்.
இதற்கமைய இவ்வருடமும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 ஆவது ஆண்டு
யூபிலியை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுரூபம் மடுவிலிருந்து மன்னார்
வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறை மாவட்டங்களின் பங்குத்
தளங்களுக்கு இன்று(07) முதல் கொண்டு செல்லப்படுவதற்கு சகல
ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
'மரியன்னையோடு நம்பிக்கையின் திருப்பயணிகளாகும்' என்ற கருப்பொருளுக்கேற்ப மக்களின் தேவைகள் நிறை வேறப்படவும் . நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும் சமாதானத்துக்கான ஒரு திருப்பயணமாக இது அமைவதாக மன்னார் திரு அவையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (07) காலை 8 மணியளவில் மடு அன்னையின் திருச்சுரூபம் அன்னை வீற்றிருக்கும் சிம்மாசனத்தில் இருந்து இறக்கப்பட்டு மன்னார் பேராலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளார்.
மன்னார், தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் நகர் வரை மோட்டார் சைக்கிள் பவனியூடாக மடு அன்னை ஊர்தியில் அழைத்து வரப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச் சொரூபம் அமைந்துள்ள பகுதி புதுப்பிக்கப்பட்டு மன்னார் மறைமாவட்ட ஆயரினால் திறந்து வைக்கப்பட்ட தோடு,சமாதான புறா மற்றும் சமாதான பலூன் என்பன பறக்கவிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மடு அன்னையின் ஊர்தி பவனி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் நோக்கி பயணித்துள்ளது.
இதற்கமைய மடு அன்னையின் திருச்சொரூபம் இறைமக்களின் தரிசிப்புக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியிலிருந்து நாளை (08) காலை 8 மணி வரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் எழுந்தருளியிருப்பார்.
அதனைத் தொடர்ந்து, மன்னார் மறைமாவட்டத்தின் ஏனைய பங்குகளை நோக்கி மடு அன்னையின் திருப்பயணம் இடம்பெறும் என்பதுடன் இன்றைய திருச்சொரூப பவனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 20 மணி நேரம் முன்

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
