மனைவியின் கத்திக்குத்து தாக்குதலில் கணவன் பலி
மஹியங்கனை பிரதேசத்தில் மனைவி கத்திக்குத்து தாக்கியதில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை கபுருகஸ்முல்ல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கத்தியால் குத்தியதில் கணவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்க முயற்சி
இவர்களுக்கிடையே தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றிரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்கிவிட்டு, பிள்ளைகளுக்கும் விஷம் கொடுக்க முயற்சித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்போது மனைவி கத்தியால் காலில் அடித்ததில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
குறித்த நபர் தனது மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
