அடக்கம் செய்யப்பட்ட யுவதியின் சடலம் தோண்டி எடுப்பு
பண்டாரவளை, பிந்துனுவெவ பகுதியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் மீளத் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சடலம் இன்று (07.01.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிந்துனுவெவ, படுலுகஸ்தென்ன பகுதியில் வாழ்ந்த 25 வயதுடைய ரஷ்மிகா நதிஷா என்ற யுவதி நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் கடந்த 4 ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டது.

களைக்கப்பட்ட ஆடைகள்
எனினும், குறித்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மயானப் பகுதியில் போடப்பட்டுள்ளதை யுவதியின் உறவினர் ஒருவர் இன்று கண்டுள்ளார்.
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தார். அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் குழுவொன்று, விசாரணைகளை நடத்தியது. யுவதி புதைக்கப்பட்ட இடத்தில் குழி மீளத் தோண்டப்பட்டு, சவப்பெட்டியின் மேல் பகுதி திறக்கப்பட்டு, உள்ளே இருந்த சடலம் வெளியே எடுக்கப்பட்டு ஓரமாக வீசப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் ஆடைகள் களையப்பட்டு சடலம் நிர்வாணமாகவே இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பிரகாரம், இது தொடர்பில் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்துக்குத் தகவல்கள் வழங்கப்பட்டு, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பதில் தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam