சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம்! கலையரசன்
சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம் என்ற தலைப்பில் முன்னெடுக்கப்படும் பேரணிக்கான அறைகூவலினை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் விடுத்துள்ளார்.
திருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பின்னரே அவர் இந்த அறைகூவலினை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் நாளை மறுதினம் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ள மாபெரும் அமைதி பேரணிக்கு எங்களுடைய மக்கள் பூரணமான ஆதரவினை வழங்க வேண்டும்.
ஏனென்றால் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களுடைய இருநூறுக்கு மேற்பட்ட ஆலயங்கள் அதே போன்று எங்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் வனபரிபாலன இலாகா, தொல்பொருள் திணைக்களத்தினால் கபளீகரமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து கொண்டு வருகின்றது.
இவ்வாறு எம் தமிழ் மக்களுக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக எமது பூரணமான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வழங்கவுள்ளது. இதற்கு அம்பாறை மாவட்ட தமிழர்களும் ஆதரவினை வழங்கவேண்டும்.
குறிப்பாக போர் முடிந்த கையோடு கிட்டத்தட்ட 12 வருடங்களாக திணிக்கப்பட்ட அடக்குமுறையை சந்தித்த எமது தமிழ் மக்கள் இப்போது மோசமான கால சூழலை எதிர்கொண்டுள்ளோம்.
குறிப்பாக தமிழர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுவதும், வாழ்விடங்கள் கபளீகரம் செய்யப்படும் செயற்பாடு அதி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கில் பழம்பெரும் ஆலயங்கள்,பௌத்த தேவாலயங்களாக மாற்றப்படுவதும் அங்கு அரச படையினர் குவிக்கப்படுவதும் அங்குள்ள எமது மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கபடும் சூழலில் தான் சிவில் அமைப்புக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் எமது மக்கள் ஆதரவினை வழங்குவதன் மூலம் எமது ஒருமித்த குரலாக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம் என்று கூறியுள்ளார்.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
