சிலிண்டர்கள் வெடித்ததை எனக்கு காட்டுங்கள்? சவால் விட்ட திஸ்ஸ குட்டியாராய்ச்சி
கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக தவறான ஒரு செய்தி பரவுவதை நான் அமைதியாக அவதானித்துக்கொண்டிருந்தேன். நான் சவால் விடுகின்றேன். முடிந்தால் எனக்கு காட்டுங்கள் எரிவாயு சிலிண்டர் எங்கு வெடித்தது?எங்குமே எரிவாயு சிலிண்டர் வெடிக்கவில்லை, எரிவாயு அடுப்பு தான் வெடிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது சரியாக வயிற்று வலியாக இருக்கும் போது கால் வலி பற்றி பேசுவதை போன்ற ஒரு செயல். ஆகவே நான் மிகத்தெளிவாக ஞாபகமூட்ட விரும்புகின்றேன். எரிவாயு கலவையில் பிரச்சினை இல்லையென மீண்டும் மீண்டும் கூறுகின்றார்கள்.எரிவாயு சிலிண்டரில் பிரச்சினை இல்லை என கூறுகின்றார்கள்.
ஊடகங்களில் ,சமூக வலைத்தளங்களில் நன்றாக தெரிகின்றது எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை. உண்மையாகவே இந்த பிரச்சினை எரிவாயு அடுப்பில் தான் உள்ளது.
நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நாம் இப்போது பரிசோதனை செய்ய வேண்டியது எரிவாயு தொடர்பாகவோ, எரிவாயு சிலிண்டர் தொடர்பாகவோ அல்ல. எரிவாயு அடுப்புக்கள் தொடர்பாகவே தேடிப்பார்க்க வேண்டும்.
தற்பொழுது சந்தைக்கு வரும் புதிய அடுப்புக்களில் மேலாக ஒரு கண்ணாடி உள்ளது. அப்படியான பாதுகாப்பு கண்ணாடிகள் மிகவும் விலை அதிகமானவை. இப்படியான பாதுகாப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அடுப்புக்களே இன்று சந்தையில் குறைந்த விலையில் 2000, 3000 ,6000 ரூபாய்க்குள் கிடைக்கின்றன.
ஆகவே சிலவேளை இவ்வாறான அடுப்புக்கள் மிகவும் குறைந்த தரமுடையதாக இருக்கலாம். நாம் அனைத்து இடங்களிலும் வெடிப்பு சம்பவங்களில் பார்த்தது எரிவாயு அடுப்பு தான். ஆகவே , இந்த பிரச்சினை எரிவாயு சிலிண்டரிலோ , எரிவாயுவிலோ இல்லை.எரிவாயு அடுப்பில் தான் உள்ளதென்று ஏன் எம்மால் சிந்திக்க முடியாது.
ஆகவே இவையனைத்தையும் அரசியல்
இலாப நோக்கத்திற்கு எடுத்துக்கொண்டு ஒரே வரிசையில் செல்வதால் தான் பிரச்சினை.
எமது நாட்டின் நிலை இன்று அதுதான், யாராவது ஒன்றை கூறினால் அதை
பெரிதுப்படுத்துவது. இளைஞர்களும் அப்படித்தான் ஊடகங்களும் அப்படித்தான்.
ஆகவே அறிவுபூர்வமாக சற்று வேறு விதத்தில் யோசிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழரை மணந்த ரம்பாவின் ரொமான்ஸ்! அழகிய ஜோடியை பார்த்து கண் வைக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம் Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

மகனை கையில் தூக்கிக்கொண்டு, மனைவியுடன் போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam
