பெண் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு நிலவும் வெற்றிடங்கள்!
பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இதனால், நாடளாவிய ரீதியில் பெண் குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் சுகாதார சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
பதில் கடமை
தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான பயிற்சி பெற்ற குடும்பநல உத்தியோகத்தர்கள் உள்ளதாக சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப நல உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக தற்போது சேவையில் உள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள், பல சுகாதார பிரிவுகளில் பதில் கடமைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் குடும்பநல அதிகாரிகளின் சேவை பாரிய பங்கு வகிக்கின்றது. அது ஏனைய அதிகாரிகளின் கடமைகள் போல அல்ல.
ஆகையால் தற்போது நிலவும் குடும்பநல உத்தியோகத்திர்களின் பற்றாக்குறை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri