நாட்டில் 140 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்ட போதும், பணம் செலுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
புற்று நோயாளர்களுக்கான மருந்து
அதேவேளை, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் இன்னும் 15 நாட்களில் இலங்கையை வந்தடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
