நுவரெலியாவில் வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு
நுவரெலியா பிரதான நகரில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு அங்கு திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்று(11.02.2024) இரவு இடம் பெற்றுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் இன்று காலை வர்த்தக நிலையத்திற்கு வந்தபோது குறித்த வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டமை தெரியவந்ததுடன் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கமராவில் பதிவான காட்சி
ஒரே உரிமையாளரின் இரண்டு வர்த்தக நிலையங்களான பல்பொருள் வர்த்தக நிலையமும், விவசாய மருந்து வர்த்தக நிலையத்தின் பின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் சிகரெட் பக்கெட்டுகளையும் சில பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் , பணம் தொடர்பில் பெருமதி இதுவரையில் கண்டறியப்பவில்லை எனவும் இக்கொள்ளை இடம்பெற்ற போது வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் கடையின் பின்புறம் உறக்கத்தில் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கண்காணிப்புக் கமராவில் பதிவான காட்சியின் உதவியினைக் கொண்டு தடயவியல் பொலிஸாரோடு இணைந்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - செ.திவாகரன்

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri