அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (UNLV) உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (06.12.2023) இடம்பெற்றுள்ளது.
மேலும், துப்பாக்கி சூடு சம்பவம் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்களை வெளியேற்றியுள்ளதோடு, அதன் பிறகு சம்பவ இடத்தை ஆராய்ந்த போது துப்பாக்கி சூட்டில் 3 பேரும், துப்பாக்கி சூடு நடத்திய ஒருவருமாக 4 பேர் உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது.
வீதிகளுக்கு பூட்டு
இந்நிலையில் ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் நேற்று முழுவதும் மூடப்பட்டதோடு, நிறுவனம் அருகே உள்ள வீதிகளையும் பொலிஸார் மூடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், திடீரென துப்பாக்கி சூடு சட்டம் கேட்டது . 7,8 குண்டுகள் பாய்ந்த சத்தம் கேட்டது. நாங்கள் பாதுக்காப்பான இடத்தை நோக்கி ஓடினோம் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |