அமெரிக்காவில் புத்தாண்டு நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற பயங்கரம்! - சிதறி கிடக்கும் துப்பாக்கி குண்டுகள்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும், படுகாயமடைந்தவர்களும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக பொலிஸார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்ச்சி நடந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் சிதறி கிடந்திருப்பதாகவும், அவை பல்வேறு துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்டவை என்றும் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. புத்தாண்டு நிகழ்ச்சியின்போது வன்முறை வெடிக்க என்ன காரணம் என தெரியாமல் பொலிஸார் குழப்பத்தில் உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்கு தெரியும், அதை ஏன் அவர்கள் அம்பலப்படுத்தவில்லை என்பது தான் விடை தெரியாத கேள்வியாக இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.