துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்! பொலிஸார் தீவிர விசாரணை
காலி, தடல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு
நேற்று(18) பிற்பகல் 1.45 மணியளவில் வீதியோர ஹோட்டல் ஒன்றுக்கு அருகே காத்திருந்த இருவர் மீது காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
திருட்டு சம்பவம்
இதேவேளை கந்தானை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தென்னந்தோட்டம் ஒன்றில் தேங்காய் திருடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

தென்னந்தோட்டத்தில் நேற்று(18) தேங்காய் திருடிக் கொண்டிருந்த சந்தேகநபர் மீது குறித்த தென்னந்தோட்டக் காவலாளி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
கந்தானை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் சம்பவத்தில் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பாதுக்க வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam