கோர விபத்தில் வெளிநாடு செல்ல தயாரான மகன் உட்பட 2 பிள்ளைகள் மரணம் - உயிருக்கு போராடும் தாய்

Sri Lanka Police Colombo Kurunegala Death
By Vethu Sep 30, 2026 12:18 PM GMT
Report

குளியாபிட்டிய - மாதம்பே பிரதான வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பம் ஒன்றின் மீது மோதியதில், இரு மகன்களும் உயிரிழந்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மூத்த மகனான 27 வயதுடைய அயோத்யா ஹன்சமால் மற்றும் இளைய மகனான 12 வயதுடைய சதித ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தாயாரான 49 வயதுடைய பிரியங்கா குமுதுனி பலத்த காயமடைந்து, சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவர் பலி

ஜப்பான் செல்வதற்காக மூத்த மகன் கொழும்பில் நடைபெறவிருந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தாயுடனும் இளைய சகோதரனுடனும் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

கோர விபத்தில் வெளிநாடு செல்ல தயாரான மகன் உட்பட 2 பிள்ளைகள் மரணம் - உயிருக்கு போராடும் தாய் | Shocking Theft In Wellawatte

மாதம்பே தொடருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பு நோக்கிச் செல்லும் தொடருந்தில் ஏறுவதற்காக வேகமாக சென்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனது இரு மகன்களையும் இழந்த தந்தையான ஹேரத் அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

“எனது மூத்த மகன் ஜப்பானுக்கு செல்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஜப்பானிய மொழியையும் நன்றாக கற்றுக்கொண்டார்.

கொழும்பில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றுக்காக அம்மா மற்றும் தம்பியுடனும் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டார்.

வேதனையில் தந்தை

பலத்த எதிர்பார்ப்புகளுடன் சென்ற எனது மகனும் அவரது தம்பியும் இன்று எனக்கு இல்லாமல் போய்விட்டனர். மனைவியும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துயரத்தை எப்படித் தாங்கிக்கொள்வது என்று தெரியவில்லை.

கோர விபத்தில் வெளிநாடு செல்ல தயாரான மகன் உட்பட 2 பிள்ளைகள் மரணம் - உயிருக்கு போராடும் தாய் | Shocking Theft In Wellawatte  

எனது மூத்த மகன் குறித்து எங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பாதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டைப் பூர்த்தி செய்துவிட்டு, அம்மாவையும் அப்பாவையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் அடிக்கடி கூறுவார்.

ஜப்பானுக்குச் சென்றால் தம்பியையும் அழைத்துச் செல்வேன். அச்சமின்றி இருக்குமாறும், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோம் என்றும் அடிக்கடி மகன் குறிப்பிடுவார்.

அந்த எதிர்பார்ப்புகளுடன் வீட்டிலிருந்து புறப்பட்ட எனது மகனுக்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மரண பீதியில் கோட்டாபய வழங்கிய சாட்சியால் பரிதாப நிலையில் மகிந்த

மரண பீதியில் கோட்டாபய வழங்கிய சாட்சியால் பரிதாப நிலையில் மகிந்த

கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு! மருத்துவமனையில் அனுமதி

கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு! மருத்துவமனையில் அனுமதி

you may like this video


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US