ஜனாதிபதி நிதியத்தில் இருந்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
ஜனாதிபதி நிதியத்திலிருந்து கடந்த அரசாங்க காலங்களில் மருத்துவ செலவுகளுக்கு கடன் பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர்,பிரதமர் ஆகியோர் இதுவரை செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 56 பேருக்கு 13 கோடிக்கும் மேல் மருத்துவ செலவுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இவ்வாறு நிதி பெறப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள செலுத்தப்படாத நிதி
நிதி வழங்கப்படும் போது கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் மற்றும் சட்டத்திட்டங்கள் கடைபிடிக்கப்படவில்லை.சிலரின் விண்ணப்பப்படிவங்கள் கூட இல்லை.மேலும் அவர்களின் பொருளாதார நிலைமை தொடர்பில் எவ்வித தகவல்களும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

ஜனாதிபதி நிதியத்தால் மருத்துவ செலவுகளுக்காக கடன் தொகை வழங்கப்படாத நிலையில்,ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு ஏழு கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது.
குற்றங்கள்
இவை 2025 யூன் மாதம் வரை மீள அறவிடப்படவில்லையாம்.மேலும் முன்னாள் பிரதமர் ஒருவருக்கு 2012-2014 ஆம் ஆண்டுகளில் 02 கோடியே 98 இலட்சம் மருத்துவ செலவுகளுக்காக கடனாக பெற்றுக் கொண்டுள்ளார்.
அதில் 01 கோடியே 37 இலட்சம் மீள செலுத்தவில்லை. இது தொடர்பில் குற்றங்கள் விசாரணைகள் திணைக்களத்தால் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[4R6PBRH ]