கொழும்பு குடும்ப பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
கொழும்பில் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சிப்பதனை குடும்ப பெண்கள் பழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் போக்கு காணப்படுவதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.
முப்பது முதல் நாற்பத்தேழு வயதுக்குட்பட்ட பெண்கள் இவ்வாறு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனைகள் காரணமாக மிரட்டும் நோக்கில் இந்த பெண்கள் உடலில் தீ வைத்து கொளுத்திக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதிகளவிலான பெண்கள் கொழும்பு வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என கூறும் அவர், சிறிய விடயங்களில் இதுபோன்ற ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு அவர் பெண்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
