அமெரிக்காவின் முடிவால் ஏற்பட்ட அதிர்ச்சி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரிக் கொள்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார்.
இதன்படி, இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உரிமை
இந்நிலையில், இந்த வரி விதிப்பு அசாதாரணமான முடிவு என்றாலும், அது அமெரிக்காவின் உரிமை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் எழுச்சி பெறும் இந்த நேரத்தில் இந்த வரிக் கொள்கையால் இலங்கை பாதிக்கப்படக்கூடாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
