துபாயில் இருந்து வருகை தந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
துபாயில் இருந்து வருகை தந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் குறித்த பெண் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை
இவர் துபாயில் இருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பெண்ணின் பயணப் பொதியிலிருந்து 10,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 50 சிகரட்டு கார்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri