இலங்கைக்கு எதிர்பாராத அதிர்ச்சி அளித்த ட்ரம்ப்!
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44சதவீத பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு எதிர்பாராத அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்" மற்றும் அமெரிக்க பொருட்களுக்கு "பரஸ்பர அணுகல் இல்லாமை" ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவால் நியாயப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, இலங்கையின் பொருளாதாரம், சமூகம் மற்றும் புவிசார் அரசியலுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இலங்கை அதிகாரிகள் இராஜதந்திர தீர்வுகளுக்காக போராடும் அதே வேளையில், மாறிவரும் உலகளாவிய வர்த்தக ஒழுங்கில் புதிய யதார்த்தங்கள் மற்றும் வாய்ப்புகளையும் அமெரிக்கா கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஆடைகள் மற்றும் ஏற்றுமதி துறைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. இலங்கையின் ஏற்றுமதித் துறை, குறிப்பாக ஆடைத் துறை, மிகவும் நேரடியான மற்றும் பாரதூரமான தாக்கத்தை இதனால் உணர்ந்திருக்கும்.
மேலும், அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஒற்றை நாட்டு ஏற்றுமதி இடமாகும். மேலும் ஆடைகள் மட்டும் ஆண்டுதோறும் 1.5 டொலரை“ பில்லியனுக்கும் அதிகமான ஏற்றுமதியை ஈட்டுகின்றன.
அத்தோடு அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி இலங்கையின் அந்நிய செலாவணி வருவாயின் மூலக்கல்லாகும்.
இந்நிலையில் அமெரிக்காவின் அறிவிப்பு இலங்கை மீதான சர்வதேச வணிக திரனை பாதிக்கும் என நம்பப்படுகிறது.
இந்த திட்டத்தின் அடிப்படை, மற்றும் உள்நோக்கங்கள் மேலும் அதனால் எற்படபோகும் சிக்கல்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு சிறப்பு நேர்காணலில் கலந்துக்கொண்ட கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்த பின்வரும் கருத்துக்கள் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்களை விளக்கியிருந்தன...

அமெரிக்காவின் வரி விதிப்பு... முதல் முறையாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க் News Lankasri

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri
