சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக நேற்று(5) முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கையைச் சுற்றியுள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியனின் இயக்கம்
இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் களுத்துறை, கெலிங்கந்த, கஹவத்தை, பொக்குனுதென்ன மற்றும் மஹவெலதொட்ட பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
இடைக்கிடையில் மழை
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75மி.மீ வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் அபாயங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
