மோடியின் விஜயத்தால் அவதியுறும் நாட்டு மக்கள் - முடக்கப்பட்ட கொழும்பு மாநகரம்!
இலங்கையில் இன்று ஒரு பக்கம் பாரத பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கொழும்பில் பாதி மக்கள் வீதியில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கொழும்பில் குறிப்பிட்ட பகுதிகளில் வீதி முழுவதும் வாகனங்களாலும், மக்களாலும் நிறைந்து காணப்பட்டது.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கொளுத்தும் வெயிலில் நடு வீதியில் சுமார் ஒரு மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
பாரத பிரதமரின் விஜயம் காரணமாக பல வீதிகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் மக்களுக்கு எந்த மாற்று வழியும் ஏற்பாடு செய்யாமல் வீதிகளில் காத்திருக்க வைத்தமை பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலில் வீதிகளில் நிரம்பி வழிந்த வாகனங்களில் இருந்த மக்கள் எமது செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்ட ஆதங்கத்தை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,