அமெரிக்காவில் அதிர்ச்சி: அழுகிய நிலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்பு
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் தகன இல்லத்தில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் 'ரிட்டர்ன் டூ நேச்சர்' என்ற அமைப்பு இறந்த உடல்களை தகனம் செய்யும் செயற்பாட்டினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் சோதனை
இந்நிலையில் சமீபத்தில் அந்த கட்டடத்தில் துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சோதனையில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட இந்த 189 உடல்களுக்கும் பதிலாக, உடல்கள் எரியூட்டப்பட்டுவிட்டதாகக் கூறி, அவர்களின் உறவினர்களுக்கு போலியாக அஸ்தி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொலராடோ மாகாணத்திற்கே இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுபிறது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
