காசா மக்களுக்கு மனிதாபிமான நிதியுதவி வழங்கவுள்ள ஜேர்மனி
காசா மக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான எனலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் மனிதாபிமான நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள நிலையில் ஜேர்மனியும் இதில் இணைந்துள்ளதைாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ உதவி
மேலும்,வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ஜேர்மனி மருத்துவக் குழுக்களையும் காசா பகுதிக்கு அனுப்பத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான எனலெனா பேர்பாக் தற்போது ஜோர்டான் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஜோர்டானில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்றபோது, “எங்கள் செய்தி தெளிவானது, நாங்கள் அப்பாவி பாலஸ்தீனிய தாய்மார்கள், தந்தைகள் மற்றும் குழந்தைகளை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளமை” குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
