உகண்டாவில் நடந்த திடீர் தாக்குதலில் மூவர் பலி
உகண்டாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள தேசிய பூங்காவிற்கு அருகே நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளும் உகண்டாவைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியும் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடவடிக்கை
குயின் எலிசபெத் தேசிய பூங்காவிற்கு வெளியே அவர்கள் பயணித்தபோது வாகனத்திற்கு தாக்குதல்தாரர்கள் தீ வைத்துள்ளதாக உகாண்டா வனவிலங்கு திணைக்களத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அண்டை நாடான கொங்கோ கிழக்கைத் தளமாகக் கொண்ட அமைப்பின் கிளர்ச்சியாளர்கள் கோழைத்தனமான நடத்தியதாக உகண்டா பொலிஸ் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபிரெட் எனங்கா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
