நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்..! உடனடியாக நீதிமன்றத்தை நாடிய ஷிரந்தி..

Shiranthi Rajapaksa Singapore
By Benat Oct 05, 2026 01:09 PM GMT
Report

சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியதும் தான் கைது செய்யப்படலாம் என தெரிவித்து முன்பிணை மனுவொன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று(05.10.2026) இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஷிரந்தி ராஜபக்சவின் கடவுச்சீட்டை இரத்துச் செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடவுச்சீட்டு இரத்து 

தற்போது, சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்கு சென்றுள்ளதாக கூறப்படும் ஷிரந்தி ராஜபக்ச, உரிய காலத்தில் விசாரணைகளுக்கு முன்னிலையாகவில்லை எனில், இவ்வாறு அவரது கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  அப்படி பயணத் தடை விதிக்கப்பட்டால் அவர் நாட்டுக்குத் திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தநிலையிலேயே, இன்றையதினம் முன்பிணை கோரிய மனுவொன்றினை ஷிரந்தி ராஜபக்ச தரப்பு தாக்கல் செய்துள்ளது.

நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்..! உடனடியாக நீதிமன்றத்தை நாடிய ஷிரந்தி.. | Shiranthi Rajapaksa S Passport Set To Be Cancelled

சிறிலிய என்ற பெயரில் வங்கிக் கணக்கொன்றைத் திறந்து, அதிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 24ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.


எனினும், அதற்கு முன்னதாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

இதனையடுத்து, தனது சட்டத்தரணிகள் ஊடாக பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவுக்கு கடிதமொன்றை அனுப்பிய ஷிரந்தி ராஜபக்ச, தனக்கு 14 நாட்கள் சலுகைக் காலத்தை வழங்குமாறு கோரியிருந்தார்.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள அந்த சலுகைக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர் நிதிக் குற்றப் பிரிவில் முன்னிலையாகாவிட்டால், அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க நிதிக் குற்றப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உரத்த குரலில் ஞானசார தேரர் கூறிய விடயம்..

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உரத்த குரலில் ஞானசார தேரர் கூறிய விடயம்..

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வீழ்ச்சிப் பாதையில் இலங்கைப் பொருளாதாரம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வீழ்ச்சிப் பாதையில் இலங்கைப் பொருளாதாரம்

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US