நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு

Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Shiranthi Rajapaksa Crime
By Benat Oct 07, 2026 02:52 PM GMT
Report

கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச, சிரிலிய சவிய கணக்கிற்கு, தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்தை எந்தவிதத்திலும் மோசடியாகப் பயன்படுத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து ஷிரந்தி ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்டிருந்த எந்தவொரு அழைப்பினையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்  தவிர்த்ததில்லை.

எதிர்பாராதவிதமான கைது 

விசாரணைக்கு அழைக்கப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்னிலையாகி அவர் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளும் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை இலஞ்ச, உழல் விசாரணை ஆணைக்குழுவினர் எதிர்பாராத விதமாக வீட்டுக்கு வருகைத் தந்து அவரை கைது செய்துள்ளனர்.

இதன்படி, மிகவும் பொறுப்புடன் எனது கட்சிக்காரரான ஷிரந்தி ராஜபக்சவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சில விடயங்களை தெளிவுபடுத்த நான் விரும்புகின்றேன்.

நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு | Shiranthi Rajapaksa Arrested

தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து 10 மில்லியன் ரூபா பணம் சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இதனை ஷிரந்தி ராஜபக்ச எந்தவிதத்திலும் முறைகேடாகப் பயன்படுத்தவில்லை.

இந்தப் பணம் புற்றுநோய் நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்காக ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக பெறப்பட்ட நிதியாகும்.

தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து இந்தப் பணம் நன்கொடையாகவே வழங்கப்பட்டிருந்தது. ஆனால்,  நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் எப்படி மீண்டும் அரச சொத்தாக மாறியது என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

இந்தப் பணம் நன்கொடையாக செலுத்தப்பட்ட நிதியத்தின் கணக்கிலேயே இன்னும் இருக்கின்றது. குறித்த பணத்தை மோசடி செய்து தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கோ அல்லது பணத்தைத் திருடுவதற்கோ எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறவில்லை.

நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு | Shiranthi Rajapaksa Arrested

மேலும், இலங்கை தேசிய சேமிப்பு வங்கி அதன் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த நிதியத்திற்கு அந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கியது.

குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்கப்பட்ட அந்தப் பணத்தை மீண்டும் தமக்குத் திருப்பித் தருமாறு வங்கியினால் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

மேலும், அரச நிதியை திருடியது மற்றும் முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டையும் எமது தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

ஷிரந்தி ராஜபக்ச எந்தவொரு அரச நிதியையும் மோசடி செய்யவோ அல்லது குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தவோ இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே வழக்கில் கைதான பிரதீப் காரியவசத்திற்கு பிணை

ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே வழக்கில் கைதான பிரதீப் காரியவசத்திற்கு பிணை

மகிந்த முன்னிலையில் ஷிரந்தி கைது - அம்பலமானது நாடகம்

மகிந்த முன்னிலையில் ஷிரந்தி கைது - அம்பலமானது நாடகம்

you may like this.. 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US