ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே வழக்கில் மற்றுமொருவர் அதிரடி கைது
தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் கைதுகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடைய சிரிலிய சவிய கணக்கு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு தொடர்பான முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அவர் ஆணைக்குழுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இதே வழக்குக்காக தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசமும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
8 ஆண்டுகளுக்கு பிறகு பேட்டி கொடுக்கப்போகும் நடிகர் ரஜினிகாந்த்... எப்போது, எந்த டிவி, முழு விவரம் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri