ராஜபக்சர்களின் குடும்பத்தினரால் பழிவாங்கப்பட்ட பெண்கள்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்
ராஜபக்சர்களின் ஆட்சி காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரால் முக்கிய பதவிகளிலிருந்த பல பெண்கள் பழிவாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களின் ஆட்சிக்காலத்தில், முக்கிய பதவிகளிலிருந்த பிரதம நீதிபதி உட்பட பல பெண்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சந்திரிக்காவுக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரங்கள்
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தவுடன், சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு எதிராக தொடர்ச்சியான திட்டமிட்ட பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ராஜபக்ச குடும்பத்தின் நிதிக்குற்றங்களில் ஈடுபட்டிருந்த பிரியங்கா நியோமாலி வீரசிங்க மற்றும் ஜானகி சிரிவர்தன உட்பட பல பெண்கள் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும், பல அரசியல் அமைப்புகளில் செயற்பட்டு வந்த பலர் ராஜபக்ச குடும்பத்தால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த பின்னணயில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தற்போது லிமினி ராஜபக்சவை மையமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெருங்கிய ரஷ்ய இராணுவ விமானங்கள்... பீதியில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தென் கொரியா News Lankasri