ஷிரந்தியின் போலி முகத்தை அம்பலப்படுத்திய அரசாங்கம் - முடிவுக்கு வந்த ஏமாற்று நாடகம்
இலங்கையில் பாரிய மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தினர் பல்வேறு வழக்குகளில் சிக்கி, சிறையில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நிதி மோசடி மற்றும் கொலை குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
முன்னர் கண்ணில் அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ளதாக போலியான தகவல்களை வெளியிட்டு, விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தார்.
ஷிரந்திக்கு மாரடைப்பு
எனினும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி மாரடைப்பு ஏற்பட்டதாக நாடகமாடி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜபக்ச தரப்பினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஷிரந்தி ராஜபக்ச இதுவரை இதய அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஷிராந்தி நேற்று காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இருந்த போதிலும், அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவக் குழு அவரது உடல்நிலையை ஆராய்ந்து பொருத்தமான சிகிச்சைகளை பரிந்துரைக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ச திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அவரது தமனிகளில் அடைப்புகள் அல்லது கல்சியம் படிவுகள் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக அவர் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அமைச்சர் விளக்கமளித்தார்.
மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனாட்டரி தமனி மாற்று அறுவை சிகிச்சை தேவையா அல்லது ஸ்டென்ட் பொருத்தப்பட வேண்டுமா என மருத்துவக் குழு தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் விளக்க மறியல்
இதேவேளை நேற்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படவிருந்த ஷிரந்தி உடல்நிலை பாதிப்பு காரணமாக சமூகமளிக்கவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஷிரந்தி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆவேசமாக கோரிக்கை விடுத்தார்.
தனது கட்சிக்காரர் இருதய நோயாளி என்றும், அவரது 3 இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதனை ஒரு விசேட காரணியாக கருதி பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு தொடர்ந்தும் நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில், ஆவேசமடைந்த அனில் சில்வா, உயிரிழந்து போனாலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதா என கத்தியமையால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.