காலிமுகத் திடலில் குப்பை பைகளுக்கு சால்வை அணிவிப்பு (Video)
கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தை நடத்தி வருபவர்கள், போராட்டம் நடத்தப்படும் இடத்தில் உள்ள குப்பைகளை பைகளில் சேகரித்து வெளியில் கொண்டு செல்ல தயாராக வைத்துள்ளளனர்.
குப்பைகள் கறுப்பு பைகளில் பொதி செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த பொதிகளுக்கு சிகப்பு நிற சால்வையை அணிவித்து, காலிமுகத் திடலில் வரிசையாக காட்சிக்கு வைத்துள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர ஏனையோர் குரக்கன் சால்வையை அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவியில் இருந்து விலக கோரி நடத்தப்படும் இந்த போராட்டம் இன்று 7வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெறுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கனவே குப்பைகள் சேகரிக்கும் வாளிகளில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட சில அரசியல்வாதிகளின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்தனர்.
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், நஸீர் அஹமட் மற்றும் பைசல் ஹாசீம் ஆகியோரின் உருவப்படங்களே இவ்வாறு குப்பைத் தொட்டிகளில் ஒட்டப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.










பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
