குறுகிய காலத்தில் இலங்கை அடைந்துள்ள பாரிய வெற்றி - சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் குறுகிய காலத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 30 வயதிற்கும் மேற்பட்ட ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கோவிட் தடுப்பூசி நேற்று வரை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும்.
20 இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களுக்கு ஆறு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறுகிய காலத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
2000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா படத்தின் டீசர்.. மிரளவைக்கும் பிரம்மாண்ட காட்சிகள்.. Cineulagam