மே9 கலவர அறிக்கையில் சிக்கிய சவேந்திர சில்வா! சி.ஐ.டி.விசாரணைக்கும் சிபாரிசு
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நேரம் இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட சவேந்திர சில்வா எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தக் கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கலவரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட தலைமையில் மூவர் கொண்ட குழுவை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்திருந்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கவில்லை
அந்தக் குழு விசாரணைகளை நிறைவு செய்து இப்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப் படை, அவசர சந்தர்ப்பத்தின்போது அழைக்கக் கூடிய இராணுவத்தின் கலகம் அடக்கும் பிரிவு, தொலைப்பேசி, பாதுகாப்பு வாகனங்கள் ஆகிய வசதிகள் முகாமுக்குள் இருந்தும்கூட இவற்றைப் பாவிப்பதற்காக ஜெனெரல் சவேந்திர சில்வா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கவில்லை என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சவேந்திர தொடர்பில் சி.ஐ.டி. விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் குழு சிபாரிசு செய்துள்ளது.

அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
இந்த அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதை நாடாளுமன்றில் வெளிப்படுத்துமாறு மொட்டுக் கட்சி எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொட்டுக் கட்சி எம்.பிக்கள் 115 பேர் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் கடிதம்
ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan