விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இடமாற்ற விண்ணப்பத்தில் சசி வீரவன்ச, தமது வழக்கு விசாரணையில், கொழும்பு பிரதான நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டு, வழக்கை வேறு எந்த நீதவானுக்கும் மாற்ற உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
போலி ஆவண சமர்ப்பிப்பு குற்றச்சாட்டு
இரண்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சசி வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, முதலாவது வழக்கில் சசி வீரவன்ச குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |