யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (24) காலை நடத்தப்பட்ட சோதனையின்போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐந்து வாள்கள் உள்ளிட்ட ஏழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை.
கைது செய்ய நடவடிக்கை
வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri