பதுளையில் மண் மேட்டில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
பதுளை - கிக்கிரிவத்தை கல்குடா வத்தை பகுதியில் மண் மேடு ஒன்றில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (23.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கல்குடாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
குறித்த நபர் நேற்று இரவு 9.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக 119 பொலிஸ் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் பின்னர் பசறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் பசறை பொலிஸ் இரவு நேர நடமாடும் கண்காணிப்பு உத்தியோகத்தர் குழுவொன்று அவ்விடத்திற்குச் சென்று சோதனையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது, குறித்த நபர் மரணித்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் சம்பவம் தொடர்பில் பசறை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
