என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் புதிய சர்ச்சையை கிளப்பிய மொட்டுக் கட்சி
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை பெற்றவராவார் என மொட்டுக் கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (06.01.2026) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அக் கட்சியின் செயலாளர் சாகர காரியசம் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எம்பிலிபிட்டிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
எம்பிலிபிட்டிய நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவராவார்.இவர் இலங்கையின் சட்டத்திட்டங்களின் படி குற்றவாளியாவார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார பாடசாலை அதிபர் ஒருவரின் கடமைக்கு இடையூறு செய்ததோடு அடாவடியில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எம்பிலிபிட்டிய மஜிஸ்திரேட் நீதிபதியால் அவருக்கு மூன்று மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.20 ஆயிரம் ரூபா அபராதமும் செலுத்தப்பட்டுள்ளது.
இவருக்கான சிறைத்தண்டனை 2026 ஆகஸ்ட் 03 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கிறது. இது இவ்வாறு இருக்க நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் இருந்து இவரை பாதுகாப்பதற்கே பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam