இலங்கை துடுப்பாட்ட வீரர்களை திட்டித் தீா்க்கும் முன்னாள் வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய துடுப்பாட்டவீரர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி, இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்திருந்தது.
இந்த தோல்வி தொடர்பில் இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பந்து வீசிய போதிலும் துடுப்பாட்டவீரர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதாக முன்னாள் அணித் தலைவர் குமார் சங்க்கார தெரிவித்துள்ளார்.
துடுப்பாட்டவீரர்களிடம் எந்தவொரு திட்டத்தையும் காண முடியவில்லை என அவர் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒட்டுமொத் அணியும் மகிவும் பலவீனமான விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக காமில் மிஷ்ராவின் துடுப்பாட்டம் ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆடுதளத்தின் தன்மை போட்டியின் சூழ்நிலை என்பனவற்றை புரிந்து கொள்ளாது இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் விளையாடியதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மிக மோசமான முறையில் விளையாடியதாக பிரபல முன்னாள் வீரர் ரஸல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
வெற்றி இலக்கினை பத்து ஓவர்களில் முடிக்க வேண்டுமென்ற வெறியுடன் விளையாடியதாகவே தென்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆடுகளத்தின் தன்மை தொடர்பில் எவ்வித ஞானமும் இன்றி இலங்கை வீரர்கள் துடுப்பெடுத்தாடியதாக தெரிவித்துள்ளார்.
இலகுவில் வென்றெடுக்கப்பட வேண்டிய போட்டியில் இலங்கை தோல்வியைத் தழுவியமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர்கள் சிறந்த முறையில் பந்து வீசினார்கள் என்று கூறுவதை விடவும் இலங்கை துடுப்பாட்டவீரர்கள் மிகவும் பலவீனமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர் என்பதே வெளிப்படையான உண்மை என ரஸல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam