இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல் - அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்களின் அவசர கோரிக்கை
துறைமுகங்களில் உள்ள வாகனங்களை விடுவிக்க முடியாமல் போயுள்ளதால் புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தேங்கியுள்ள வாகனங்கள்
மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கியுள்ள 2000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.
வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னரே இந்த வாகனங்கள் முற்பதிவு செய்யப்பட்டமையால், அவற்றை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிபந்தனைகளில் சலுகை
இந்த வாகனத் தொகுதிக்கான அனைத்துக் கொடுப்பனவுகளும் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன. வாகனங்களை விடுவிப்பதற்கான நிபந்தனைகளில் ஏதேனும் சலுகைகளை வழங்கியாவது அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்மூலம் அரசாங்கத்திற்கு உரிய வரி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வாகனங்களை விடுவிக்க முடியாமல் போயுள்ளதால், புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam