சபையில் மாவை குறித்து சண்முகம் குகதாசன் ஆற்றிய உரை

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Ilankai Tamil Arasu Kachchi Mavai Senathirajah Sri Lanka Politician
By H. A. Roshan Jun 06, 2025 06:41 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in அரசியல்
Report

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரான, மறைந்த மாவை சேனாதிராசா பற்றிய இரங்கல் உரையினை நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் நிகழ்த்தியிருந்தார். 

அவர் தனது உரையில், "மாவை சேனாதிராசா, 1942ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இருபத்து ஏழாம் நாள் சோமசுந்தரம், தையல்நாயகி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

இவருக்கு ஆறு உடன்பிறப்புகள் உள்ளனர். இவரது இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராசா. இவரது சொந்த ஊர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவிட்டபுரம் என்பதனால் ஊரின் பெயருடன் இணைத்து மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். இவர் தனது தொடக்க கல்வியை தெல்லிப்பளை வீமன்காமம் மகா வித்தியாலும் இடைநிலைக் கல்வியை காங்கேசன்துறையில் உள்ள நடேஸ்வராக் கல்லூரியிலும் பயின்றார்.

டக்ளஸுடன் இணையும் சுமந்திரன் - மணிவண்ணன்

டக்ளஸுடன் இணையும் சுமந்திரன் - மணிவண்ணன்

அரசியல் கிளர்ச்சியாளர்கள்

1980ஆம் ஆண்டு மாசி மாதம் 06ஆம் நாள் சதாசிவம் செல்வமணி இணையரது மகளான பவானி என்பவரைத் திருமணம் செய்தார். சேனாதிராசா  பவானி இணையருக்கு கலையமுதன், ஆரா அமுதன், தாரகா என மூன்று மக்கள் உள்ளனர். இளம் அரசியல் கிளர்ச்சியாளர்கள் பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாக மலர்ந்த நிகழ்வுகளால் வரலாறு நிறைந்துள்ளது.

சபையில் மாவை குறித்து சண்முகம் குகதாசன் ஆற்றிய உரை | Shanmugam Kugadas Mavai Senathiraja

இளம் வயதில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளையோர் பிற்காலத்தில் அரசியலில் தூண்களாக மிளிர்ந்தனர். இனப்பிரிவின் இருபுறமும் இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் இலங்கையிலும் உள்ளன.

மாவை சேனாதிராசாவின் பெயரையும் அந்த எடுத்துக்காட்டுகளின் பட்டியலில் சேர்க்கலாம். இலங்கைத் தமிழர் உரிமை மீட்பு தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி 1961ஆம் ஆண்டில் மேற்கொண்ட அறவழிப் போராட்டத்தை அடக்க அன்றைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம், இராணுவத்தை அனுப்பி அதனைக் கடுமையாக ஒடுக்கியது. அப்பொழுது சேனாதிராசா நடேஸ்வரா கல்லூரியில் மாணவராக இருந்தார்.

சேனாதிராசாவும் அவரோடு ஒத்த மாணவர்களும் பாடசாலையை தவிர்த்து பல்வேறு அறவழிப் போராட்டங்களில் பங்குகொண்டு தன்னார்வ உதவிகளைச் செய்தனர். அதன் பின்னர் 1962ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் சேனாதிராசா தன்னை இணைத்துக் கொண்டார்.

பதவிக்காலம் 

இந்த பட்டறிவுகள் அனைத்தும் மாவையின் அரசியல் நுழைவுக்கு வழி சமைத்தன. இவர் முதலில் காங்கேசன்துறை தொகுதியின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராகவும் அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியின் இணைச் செயலாளர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

சபையில் மாவை குறித்து சண்முகம் குகதாசன் ஆற்றிய உரை | Shanmugam Kugadas Mavai Senathiraja

1970ஆம் ஆண்டு இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக தரப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையில் மிகவும் தீவிரமாக செயற்பட்டதுடன் அதன் தலைவராகவும் பணியாற்றினார். அந்த கால கட்டத்தில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்ட 42 இளைஞர் தலைவர்களுள் சேனாதிராசா முதன்மையானவராக விளங்கினார்.

அரசியல் கைதிகளாக பல ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த நமசிவாயம் ஆனந்த விநாயகம் (வண்ணை ஆனந்தன்), காத்தமுத்து சிவநாதன் (காசி ஆனந்தன்), மாவை சேனாதிராசா ஆகிய மூவரும் அக்காலத்தில் அரசியல் உணர்வுள்ள தமிழ் இளையோரின் கதாநாயகர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவை சேனாதிராசா தனது வாழ்க்கையில் பல்வேறு ஈழத் தமிழர் உரிமை மீட்பு செயற்பாடுகளில் பங்குகொண்டமைக்காக ஏழு முறை கைது செய்யப்பட்டு ஏறத்தாழ பதினோராண்டுகளை எட்டு வெவ்வேறு சிறைகளில் ஓர் அரசியல் கைதியாக கழித்துள்ளார். 1989ஆம் ஆண்டில் முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மறைவு காரணமாக 1989 ஆம் ஆண்டில் தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

பிள்ளையான் - கருணாவையும் சி.வி.கே.சிவஞானம் விரைவில் சந்திக்கலாம்!

பிள்ளையான் - கருணாவையும் சி.வி.கே.சிவஞானம் விரைவில் சந்திக்கலாம்!

கட்சியின் தலைவர் 

1989ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரையும், அதன் பின்னர் மீண்டும் 1999ஆம் ஆண்டில் நீலன் திருச்செல்வத்தின் மறைவுக்கு பின்னர் 1999 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையும் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.

சபையில் மாவை குறித்து சண்முகம் குகதாசன் ஆற்றிய உரை | Shanmugam Kugadas Mavai Senathiraja

2000 ஆம் ஆண்டில் மீண்டும் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதோடு 2020 வரையும் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியதோடு ஐந்து ஆண்டுகள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவும் ஆக மொத்தம் 25 ஆண்டுகள் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராசா ஆவார்.

2010 இல் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டு 2014 வரை அப்பதவியை வகித்தார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மாவை சேனாதிராசா 2024ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் அக்கட்சியின் தலைவராக விளங்கினார்.

2013ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக மாவை சேனாதிராசாவை நிறுத்த பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் விரும்பினர்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அமரர் இரா சம்பந்தன் அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து போட்டியில் இருந்து விலகி முன்னாள் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான சி.வி.விக்னேஸ்வரனுக்கு வாய்ப்பினை வழங்கி பெருந்தன்மையுடன் செயற்பட்ட தலைவராக மாவை சேனாதிராசா விளங்கினார்.

சபையில் மாவை குறித்து சண்முகம் குகதாசன் ஆற்றிய உரை | Shanmugam Kugadas Mavai Senathiraja

நான், அமரர் மாவை சேனாதிராசாவோடு 1974 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஐம்பது ஆண்டுகள் பழகியிருக்கின்றேன். அவர் பழகுவதற்கு இனிமையானவர். அனைவரோடும் பணிவுடன் பழகும் பண்பாளர். யார் உற்றார் ? யார் அயலவர் ? யார் நண்பர் ? யார் பகைவர் ? என்று பாராது அனைவரோடும் அன்போடு பழகும் அருங்குணத்தவர்.

அவரது அரசியல் எதிரிகளும் மதிக்கும் மனிதருள் மாணிக்கமாக மாவை சேனாதிராசா விளங்கினார். இலங்கைத் தமிழர் இனச்சிக்கலைத் தீர்ப்பதற்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக அயராது பாடுபட்ட மாவை சேனாதிராசா பெரும்பான்மை மேலாதிக்கத்திற்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பின் அடையாளமாக விளங்கினார் என்பதோடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அடையாளமாகவும் கருதப்பட்டார்.

அமரர் மாவை சோமசுந்தரம் சேனாதிராசா, 2025ஆம் ஆண்டு தை மாதம் 29ஆம் நாள் இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது மனைவி பவானி அம்மையாருக்கும், மகன்களான கலையமுதன் மற்றும் ஆரா அமுதன், மகள் செல்வி. தாரகா உள்ளிட்ட உற்றார் உறவினர் அனைவருக்கும், எனது சார்பிலும் திருகோணமலை மாவட்ட மக்கள் சார்பிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும் துயர் தோய்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US