ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு வாபஸ்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர, கடந்த கோட்டாபய ஆட்சியின் போது அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார்.
ஷானி அபேசேகர
அதனையடுத்து கடந்த காலத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தலான சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் வாகன விபத்தொன்றின் மூலம் தன்னைப் படுகொலை செய்யும் சதித்திட்டமொன்றை அப்போதைய குற்றப் புலனாய்வு பொலிஸ் பணிப்பாளர் ஊடாக முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பி்ட்டு, தனக்குப் போதுமான பாதுகாப்பு வழங்குமாறு ஷானி அபேசேகர உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு இரண்டு பொலிசாரின் பாதுகாப்பு இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டிருந்தது.
அடிப்படை உரிமை மீறல்
இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, தற்போது தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு திருப்தி அளிப்பதாக குறிப்பிட்டு, தனது மனுவை மீளப் பெறுவதாக சட்டத்தரணி உபுல் ஜயசூரிய ஊடாக ஷானி அபேசேகர நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அதனை ஏற்றுக் கொண்டு அவரது அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
