தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பது குறித்து சாணக்கியன் கருத்து
அரசியலமைப்பை இன்னும் கற்றுக் கொண்டிருப்பதால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடுவது குறித்து எண்ணமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அனைத்து கட்சிகளிலும் உட்பூசல்கள் இருப்பது போன்று தமிழரசு கட்சியிலும் உட்பூசல்கள் உள்ளது இதுவே அரசியல்.
கட்சியில் தேவைப்படும் மாற்றம்
குறிப்பாக சொல்வதாயின், அம்பாறை மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறுபட்டவை.
அதேபோல, யாழ் குடாநாட்டில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏனைய வடமாகாண தீவுகளிலிருந்து வேறுபட்டவை.
இதுபோன்ற பிரச்சினைகளை கையாள்வதற்கு கட்சியில் ஒரு மாற்றம் தேவை.
அத்துடன், புதிய தலைவர் தேர்தெடுக்கப்படும் பட்சத்தில் கட்சியில் சாதகமான மாற்றங்கள் நிகழும் என நான் நம்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசியலைமைப்பில் சிக்கலான விடயங்களை நான் இன்னும் கற்றுக் கொண்டிருப்பதாலும் அனுபவங்களை பெற வேண்டியுள்ளதாலும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடுவது குறித்து எண்ணமில்லை என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri