சாணக்கியனின் கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
மட்டக்களப்பில் தற்போது நிலவும் சில பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வளிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(12) இடம்பெற்ற அமர்வின்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்ததாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் காயன்கேணி பிரதேசத்தில் புதிதாக ஓர் காணியினை இராணுவம் தன் வசப்படுத்தும் திட்டம் உள்ளதாக அறிந்தோம்.
அதே போல் பாலையடி வெட்டை இராணுவ முகாமில் ஓர் பகுதியை அவ் ஊர் மக்கள் மலசலம் அமைப்பதக்காக கேட்கின்றார்கள்.
இரு கிழமைகளுக்குள் தீர்வளிப்பதாக உறுதி
இவற்றினையும் கருத்தில் கொண்டு இவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மட்டக்களப்பில் இவ்வாறாக பல காணிகள் காணப்படுகின்றது.
இவற்றினை விடுவிக்க ஜனாதிபதியடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன் அவற்றை உங்களிடமும் முன்வைக்கின்றேன் எமது மாவட்டத்தில் விடுவிக்கப்படவேண்டிய இடங்களை ஆராய்வதற்கு ஓர் குழு ஒன்றை அமைத்து ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நீங்கள் இராஜாங்க அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் இந்த காணிகளை மக்களுக்கு கையளிக்க கூடியதாக மற்றும் விடுவிக்க கூடிய வகையில் காணப்படும் என்பதனை உங்களிடம் நான் கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் இரு கிழமைகளுக்குள் சரிசெய்து தருவதாக நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
