பதவி விலகத் தயார்! இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்க சவால்
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் தன் மீது சுமத்தப்பட்ட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சாணக்கியன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அதனூடாக அரசியல் செய்து தன்மீது கறை பூச துடிக்கின்றார்.
கல்லடி கடற்கரையில் கைது
தமது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவியாளர் இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் தனியார் ஊடகங்களுக்கு தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இராசமாணிக்கம் சாணக்கியன் சம்பவ தினமான அன்று நானும் அங்கு இருந்ததாகவும் இலஞ்ச ஊழல் அதிகாரிகள் வருகைத்தந்திருந்த வேளை அங்கிருந்து தாம் முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி சென்றதாக பகிரங்கமாக பொய் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இதனை வைத்து அரசியல் இலாபம் கான துடித்து வருகின்றார்.
அவ்வாறு தாம் எவரிடமும் இலஞ்சம் வாங்கவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அதிகாரிகள் கடமையில் இருக்கும்போது தாம் அவ்விடத்தில் இருக்கவில்லை. தனது மெய்ப்பாதுகாவலர் மூலம் அதனை தன்னால் நிரூபிக்க முடியும்.
பொய்களை மாத்திரம் அரசியல்
குறித்த சம்பவத்துடன் தொடர்பு படுத்தி, திரிபு படுத்திய கருத்துக்களை வெளியிட்ட சாணக்கியன் குறித்த சம்பவத்தின் போது தான் இருந்ததை நிரூபித்து காட்டினால் தான் அரசியலில் இருந்து முற்றாக விடை பெறுகின்றேன் .
அவ்வாறு நிரூபிக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசியலில் இருந்து விடை பெறுவாரா?
தாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து வருவதினை பொறுக்க முடியாத சாணக்கியன் பொய்களை மாத்திரம் கூறி அரசியல் செய்துவரும் நிலையில், தன்னை பற்றி அவதூறு கூறுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லாதவர் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
