பல மில்லியன் ரூபா தள்ளுபடி! மக்கள் மீது வரிச் சுமைகள்: சாணக்கியன் கருத்து (Video)
நாட்டு மக்கள் போதிய வருமானம் இன்றி வரிச் சுமையுடன் அன்றாட செலவுகளுக்கே அல்லல்படுவதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில், மாகா உட்பட 15 நிறுவனங்கள், அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய 793 மில்லியன் ரூபாவை தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களையே கடன் சுமைக்குள்
மேலும், அதில் மாகா நிறுவனம் செலுத்த வேண்டிய 482 மில்லியனை குறைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கோப் குழுவில் நடந்த கூட்டத்தின்போது வெளிப்படுத்தப்பட்டது. இதன்போது நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன்.
நாடானது பாரிய கடன் சுமைகளுக்கு மத்தியில் இருக்கின்றது. அத்துடன் மக்கள் போதிய வருமானம் இன்றி வரிச் சுமையுடன் அன்றாட செலவுகளுக்கே அல்லல்படுகின்றனர்.
இதற்கான இந்தக் கூட்டத்தில் எதிர்ப்பினை வெளியிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |