உலகக் கிண்ணம் 2023: ஷகீப் அல் ஹசன் விலகல்
உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
டெல்லியில் நேற்றைய தினம்(06.11.2023) இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அடுத்த போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
டெல்லியில் அவரது இடது கை எக்ஸ்ரே பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டி
இப்போட்டியில் துடுப்பாட்டம் செய்தபோது பந்து கையில் பட்டதால் காயம் அடைந்த அவர், தற்காலிக சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து துடுப்பாட்டம் செய்தார்.

அதன்படி, புனேவில் வரும் 11ஆம் திகதி நடைபெறும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பங்களாதேஷ் அணி விளையாடும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்: அம்பிட்டிய தேரருக்கு சபையில் தகுந்த பதிலடி கொடுத்த சாணக்கியன் (Video)
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri