இலங்கையின் கிரிக்கெட் துறை வீழ்ச்சி: முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திலகரட்ன தில்ஷான்
இலங்கை கிரிக்கெட் அணியில் புதிய இளம் வீரர்களுக்கு முறையான பயிற்சியளித்து வாய்ப்புகளை வழங்கினால் கிரிக்கெட் விளையாட்டுத் துறையை கட்டியெழுப்ப முடியும் என இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.
காணொளியொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பெரும் பேசுபொருளாக மாறியுள்ள இலங்கையின் கிரிக்கெட் துறை வீழ்ச்சி குறித்து அனைவரும் நம்பிக்கையிழந்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
கிரிக்கெட் துறையை கட்டியெழுப்பல்
எனவே, எதிர்காலத்தில் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டு முறையாக கிரிக்கெட் துறையை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும்.
வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தாமாக முன்வந்து கிரிக்கெட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதற்கு நானும் தயாராக இருக்கின்றேன். இலங்கை கிரிக்கெட் துறையை கட்டியெழுப்புவதற்கு என்னாலான உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
