நாட்டில் தரம் குறைந்த டீசல் விநியோகம்: நாடாளுமன்றில் அம்பலமான விடயம்
தரம் குறைந்த 40000 மெற்றிக்தொன் டீசல் சந்தைக்கு வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (07.11.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
டீசல் மாதிரிகளின் தர பரிசோதனை
அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 5ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 40000 மெற்றிக் தொன் டீசல் மாதிரிகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.
எனினும் கொலன்னாவையில் குறிப்பிட்ட டீசல், விநியோகம் செய்யப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் டீசல் கையிருப்பின் மாதிரிகளில் இரண்டு LIOC ஆய்வக சோதனை அறிக்கைகளில் அவற்றின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |