சீசெல்ஸ் கடல் எல்லையில் எரியூட்டப்பட்ட ஆழ்கடல் படகு
சீசெல்ஸ் குடியரசின் கடல் எல்லையில் கடலோர பாதுகாப்பு படையால் இலங்கைக்கு சொந்தமான ஆழ்கடல் கடற்றொழில் படகு ஒன்று தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியான செயல்பாடு என ஆழ்கடல் கடற்றொழில் படகு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீசெல்ஸ் குடியரசின் கடல் எல்லையில் கைப்பற்றப்பட்ட இலங்கைக்கு சொந்தமான ஆழ்கடல் கடற்றொழில் படகில் இருந்த 6 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னர்,முன்னெப்போதும் நடைபெறாத சம்பவமாக படகு எரியூட்டப்பட்டுள்ளது.
சீசெல்ஸ் குடியரசில் கைப்பற்றப்பட்ட படகு
இது ஒரு வேண்டத்தகாத செயற்பாடாகும். டிசம்பம் 07 ஆம் திகதி வென்னப்புவ வெல்லமங்கர பகுதியிலிருந்து 6 கடற்றொழிலாளர்களுடன் (ஹிசானி-1) என்ற ஆழ்கடல் படகு சென்றுள்ளது.
அந்த படகு டிசம்பர் 30 சீசெல்ஸ் குடியரசின் கடலோர பாதுகாப்பு படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.கடல் எல்லையை மீறும் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதைவிடுத்து இவ்வாறான செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

இதனால் படகு உரிமையாளர்களுக்கு 8 கோடிக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.